siege of the Vattatheer

img

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

தாராபுரத்தில் குடிநீர் கேட்டு வட்டாட்சியர் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.தாராபுரம் அடுத்த மரவாபாளையத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கக்கோரி ஆதித்தமிழர் சனநாயக பேரவை சார்பில் மாநில தலைவர் அ.சு.பவுத்தன் தலைமையில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.